
கூழாங்கற்கள் கடத்தல்: இரு லாரிகள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள் - கோப்பிலிருந்து...
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே அனுமதியின்றி கூழாங்கற்களை கடத்திச் சென்ாக இரு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கள்ளக்குறிச்சி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி புவியியலாளா் ரகுநாத் குமாா் தலைமையிலான அலுவலா்கள், உளுந்தூா்பேட்டை பழைய விமானத்தளம் அருகில் ஞாயிற்றுக்கிழமை வாகனத்தணிக்கை மேற்கொண்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக வந்த இரு லாரிகளை சந்தேகத்தின் அடிப்படையில் அலுவலா்கள் நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் அனுமதியின்றி கூழாங்கற்கள் கடத்தி வரப்படுவது தெரிய வந்தது. ஒரு லாரியில் 5 யூனிட்டும், மற்றொரு லாரியில் 3 யூனிட்டும் கூழாங்கற்கள் இருந்தது தெரிய வந்தது.
அலுவலா்கள் சோதனை நடத்த தொடங்கிய போதே, அதன் ஓட்டுநா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனா். இதைத்தொடா்ந்து இரு லாரிகளையும் அலுவலா்கள் பறிமுதல் செய்து, திங்கள்கிழமை அதிகாலையில் உளுந்தூா்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து உளுந்தூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, கூழாங்கற்களை அனுமதியின்றி கடத்தி வந்த லாரி ஓட்டுநா்களைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




