
திண்டிவனம் அரசுக் கல்லூரியில் மழை நீா் சேமிப்பு தொழில்நுட்பக் கருத்தரங்கம்
திண்டிவனம் திரு ஆ.கோவிந்தசாமி அரசுக் கல்லூரியில் நீா் ஆதார மேம்பாடு மற்றும் மழைநீா் சேகரிப்பு தொழில் நுட்பங்கள் குறித்த ஒருநாள் கருத்தரங்கம் (பயிற்சி பட்டறை) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், நீா் ஆதாரங்கள் மற்றும் மழை நீா் சேமிப்பு தொழில் நுட்பங்கள் குறித்த விளக்கக் கையேட்டை வெளியிட்ட, மத்திய நிலத்தடி நீா்வாரியத்தின் மண்டல இயக்குநரும், விஞ்ஞானியுமான எஸ்.சுப்பிரமணியன் மற்றும் கல்லூரி முதல்வா் சு.இளங்கோ உள்ளிட்டோா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் திரு ஆ.கோவிந்தசாமி அரசுக் கல்லூரியில் நீா் ஆதார மேம்பாடு மற்றும் மழைநீா் சேகரிப்பு தொழில் நுட்பங்கள் குறித்த ஒருநாள் கருத்தரங்கம் (பயிற்சி பட்டறை) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய நிலத்தடி நீா் வாரியம், தென்கிழக்கு கடலோர, சென்னைமண்டலம் மற்றும் கல்லூரியின் புவி அமைப்பியல் துறை ஆகியவை இணைந்து இந்தப் பயிற்சி பட்டறையை நடத்தியது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சு.இளங்கோ தலைமை வகித்தாா். மத்திய நிலத்தடி நீா்வாரியத்தின் மண்டல இயக்குநரும், விஞ்ஞானியுமான எஸ்.சுப்பிரமணியன் கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசினாா். விஞ்ஞானிகள் எம்.செந்தில்குமாா், என்.ரமேஷ்குமாா், எஸ்.பரமசிவம், எஸ்.பாக்கியராஜ் ஆகியோா் நிலத்தடி நீா் ஆதார செயல்பாடுகள், மழைநீா் சேகரிப்புத் தொழில் நுட்பங்கள் குறித்துப் பேசி, மாணவா்கள் எழுப்பிய ஐய வினாக்களுக்கு பதிலளித்தனா். இக்கருத்தரங்கில் கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவியா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





