தமிழக ரயில் திட்டங்களுக்கு நிதி கிடைக்காததற்கு எம்.பி.க்கள் இடையே ஒற்றுமை இல்லாததே காரணம்
ராமங்கள் அதிகம் உள்ள ஆரணி மக்களவைத் தொகுதியில் மோடி அலை எப்படி உள்ளது?
குஜராத்தை போன்று அடிப்படை வசதிகள் இந்தியா முழுவதும் கிடைக்க மோடியை பிரதமராக்க வேண்டும். இந்தியாவிலுள்ள 110 கோடி மக்களில் மோடி பெயரைத் தெரியாதவர்கள் இல்லை. ஆகையால் ஆரணி பகுதியிலுள்ள குக்கிராமங்களிலும் மோடியைப் பற்றி பேசுகிறார்கள். மோடி அலை என்னை நிச்சயமாக வெற்றி பெற வைக்கும்.
கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழக ரயில் திட்டங்களுக்கு குறைவாக நிதி ஒதுக்கப்படுவது ஏன்?
நான் 14 மாதங்கள் ரயில்வே இணை அமைச்சராக இருந்தேன். இதில் ஒரு ரயில்வே பட்ஜெட்டை சந்தித்தேன்.
அப்போது தமிழகத்துக்கு ரூ.1800 கோடி ஒதுக்கி, கூடுதல் ரயில் திட்டங்கள், அகலப் பாதை திட்டங்கள், ரயில்வே தரைப் பாலங்கள், ரயில்வே மேம்பாலங்கள் உள்பட பல திட்டங்களை கொண்டு வந்தேன்.
இவையெல்லாம் பாமக எம்.பிக்களின் ஒத்துழைப்போடு நான் தமிழகத்துக்கு செய்தது. தமிழகத்தைச் சேர்ந்த மற்ற கட்சி எம்.பி.க்கள் யாரும் ஒத்துழைப்பு அளிக்கவில்லை.
ஆனால் கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் அனைத்து கட்சி எம்.பி.க்களும் ஒற்றுமையாக இருந்து அவர்களின் மாநிலத்துக்கு என்ன தேவையோ அதை கூட்டாகச் சேர்ந்து பெற்று வருகின்றனர்.
இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் எம்.பி.க்கள் இப்படி ஒற்றுமை இல்லாமல் உள்ளனர்.
கூட்டணிக் கட்சிகளான தேமுதிக, பாமக, மதிமுக, பாஜக ஆகியவற்றுக்கு இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லை என்று கூறப்படுகிறதே?
அது தவறான செய்தி. கூட்டணிக் கட்சியினர் எனக்கு முழுமையாக பணி செய்கிறார்கள். என்னுடைய வெற்றிக்குத் தேவையான தேர்தல் பணிகளை செய்துவருகின்றனர்.
மருத்துவர் ராமதாஸ் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யவில்லையே, ஏன்?
சேலத்தில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
மேலும் அடுத்த சில நாள்களில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் எத்தனை இடங்களில் வெற்றி பெறும்?
நாங்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறோம்.
மோடி தமிழகத்தில் பிரசாரம் செய்திருப்பது எங்கள் வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.