கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

காங்கிரஸ் போட்டியிடும் 41 தொகுதிகளின் பட்டியல் வெளியீடு

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 41 தொகுதிகளின் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.  காங்கிரஸ் கட்சிக்கு என்று செல்வாக்கு உள்ள தொகுதிகளே பெரும்பாலும் அக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:58 pm

அரவிந்தன்

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 41 தொகுதிகளின் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.  காங்கிரஸ் கட்சிக்கு என்று செல்வாக்கு உள்ள தொகுதிகளே பெரும்பாலும் அக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

  திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அந்த 41 தொகுதிகளை எவை என்பது தொடர்பாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையிலான குழுவினரும் மூன்று கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.  அதைத் தொடர்ந்து கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை வியாழக்கிழமை மாலை சந்தித்தார்.

 41 தொகுதிகள் தொடர்பான ஒப்பந்தத்தில் கருணாநிதியும் இளங்கோவனும் கையெழுத்திட்டனர்.  பின்னர் செய்தியாளர்களிடம் இளங்கோவன் கூறியது:-

 திமுக தலைமையோடு பேச்சுவார்த்தை சுமூக நடைபெற்றது. கருணநிதியை 6-ஆவது முறையாக முதல்வராக்குவதற்கு காங்கிரஸôர் பாடுபடுவோம். திமுக - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெறும் என்றார் அவர். 41 தொகுதிகள் விவரம்: அதன்பின், காங்கிரஸýக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் பட்டியலையும் அவர் வெளியிட்டார்.

 தொகுதிகள்: திருத்தணி, அம்பத்தூர், ராயபுரம், மயிலாப்பூர், ஸ்ரீபெரும்புதூர் (தனி), மதுரவாயல், ஆற்காடு, ஓசூர், கலசப்பாக்கம், செய்யாறு, ஆத்தூர் (தனி), சங்ககிரி, நாமக்கல், கோபிசெட்டிபாளையம், உதகமண்டலம், காங்கேயம், தாராபுரம் (தனி), சூலூர், கோவை (தெற்கு), வேடசந்தூர், கரூர், திருச்சி கிழக்கு, முசிறி, ஜெயங்கொண்டம், காட்டுமன்னார்கோவில் (தனி), வேதாரண்யம், நன்னிலம், பாபநாசம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, மதுரை (வடக்கு), திருமங்கலம், சிவகாசி, முதுகுளத்தூர், ஸ்ரீவைகுண்டம், தென்காசி, நாங்குநேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 41 தொகுதிகள் ஆகும்.

காங்கிரஸ்க்கான தொகுதிகள்: மக்களவைக்கு ஒரு தொகுதி என்ற அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.  பெரும்பாலும் காங்கிரஸக்குச் செல்வாக்கு உள்ள தொகுதிகளாகவே ஒதுக்கப்பட்டுள்ளன.  ஒருவேளை, அதிமுகவுடன் - தமாகா கூட்டணி ஏற்பட்டால், காங்கிரஸ் வேட்பாளர்கள் தமாகா வேட்பாளர்களையே எதிர்த்துக் களம் காணும் வகையில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதிமுக - காங்கிரஸ் நேரடிப் போட்டி: அதிமுக 227 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனினும், கூட்டணிக் கட்சியினரும் அதிமுகவின் சின்னத்திலேயே போட்டியிட உள்ளனர். காங்கிரஸக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் 40 தொகுதிகளில் அதிமுக - காங்கிரஸ் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கேயம் தொகுதியில் மட்டும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையை எதிர்த்து காங்கிரஸ் போட்டியிடுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.