தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

தேர்தல் தேதி அறிவித்தவுடன் கூட்டணி குறித்து தெரிவிப்பேன்: விஜயகாந்த்

திருக்கோவிலூர்,  கூட்டணி குறித்து யாருடனும் நான் பேசவில்லை; இதுவரை தனியாகத்தான் இருக்கிறேன். தேர்தல் தேதி அறிவித்தவுடன் கூட்டணி குறித்து தெரிவிப்பேன் என்று விஜயகாந்த் கூறினார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

திருக்கோவிலூர்,  கூட்டணி குறித்து யாருடனும் நான் பேசவில்லை; இதுவரை தனியாகத்தான் இருக்கிறேன். தேர்தல் தேதி அறிவித்தவுடன் கூட்டணி குறித்து தெரிவிப்பேன் என்று விஜயகாந்த் கூறினார்.

திருக்கோவிலூர், ரிஷிவந்தியம் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1.77 கோடி செலவில் நடைபெற்ற பணிகளுக்கான பெயர்ப் பலகைத் திறப்பு, மாற்றுத் திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கும் விழா விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியது:

ரிஷிவந்தியம் தொகுதியில் என்னால் முடிந்தவரை பணிகளை செய்து முடித்துள்ளேன். தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு பைசாவைக்கூட எடுக்காமல் நிதியை ஒதுக்கியுள்ளேன். நாடாளுமன்றத்தை அதிமுக உறுப்பினர்கள் முடக்கியதால் ரூ.200 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதற்காக அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், தமிழக சட்டப்பேரவையை நாங்கள் முடக்கினால் மட்டும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடையவர்களை சிறையிலிருந்து விடுதலை செய்து விட்டால் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று ஜெயலலிதா நினைக்கிறார். அது ஒருபோதும் நடக்காது. பணத்துக்கும், புகழுக்கும் ஆசைப்படுபவன் நான் இல்லை. இதுவரை நான் தனியாகத்தான் இருக்கிறேன். தெளிவாகவும், தைரியமாகவும் இருக்கிறேன். யாருடனும் கூட்டணி பற்றி பேசவில்லை, பணமும் வாங்கவில்லை. நான் சொல்வதுதான் வேதவாக்கு. மற்றவர்கள் பேசுவதை பொருட்படுத்த வேண்டாம்.

தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குறித்து தொண்டர்களையும், பத்திரிகையாளர்களையும் அழைத்து பகிரங்கமாக அறிவிப்பேன் என்றார் விஜயகாந்த்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.