இந்த மாத இறுதியில் கூட்டணி அறிவிப்பு: ஜி.கே.வாசன்
வரும் சட்டப்பேரவை எந்தக் கட்சியுடன் கூட்டணி அறிவிóப்பை இந்த மாத இறுதியில் வெளியிடுவேன் என்று என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். சென்னையில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:


வரும் சட்டப்பேரவை எந்தக் கட்சியுடன் கூட்டணி அறிவிóப்பை இந்த மாத இறுதியில் வெளியிடுவேன் என்று என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். சென்னையில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் என யாரையும் பாதிக்காத வகையில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக இந்த மாத இறுதியில் அறிவிப்பேன் என்றார்.3 அணியிடம் பேச்சுவார்த்தை: அதிமுக கூட்டணியில் தமாகா இடம்பெறும் என்று எதிர்பார்ப்பு உள்ளது.
ஆனால், அதிமுக அணியில் தமாகா கேட்கும் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
மேலும், ஜி.கே.வாசனை மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் நேரில் சந்தித்து, பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்திவிட்டனர்.
ஆனால், இதுவரை வாசன் முடிவு தெரிவிக்கவில்லை என்கின்றனர். இதற்கிடையில், தமாகாவில் உள்ள திமுக ஆதரவு தலைவர்கள் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
காங்கிரஸýக்கு அளிக்கப்படும் தொகுதிக்கு நிகராக தமாகாவுக்கும் அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். இதை திமுக தலைமை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. மூன்று அணிகளுடன் தமாகா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எதிலும், இதுவரை இறுதி முடிவு எட்டப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...