சிதம்பரம்: சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதியில் மொத்தம் 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலை கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பி.எஸ்.விஜயலட்சுமி திங்கள்கிழமை வெளியிட்டார். அதில் 13 பேர் கொண்ட வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இறுதிப்பட்டியலில் உள்ள வேட்பாளர்கள் பெயர், கட்சி மற்றும் சின்னம் விபரம் வருமாறு: கே.ஆர்.செந்தில்குமார் (திமுக)- உதயசூரியன், கே.ஏ.பாண்டியன் (அதிமுக)- இரட்டைஇலை, க.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி)- சுத்தியல், அரிவாள் நட்சத்திரம், கோ.மணிமாறன் (பாரதிய ஜனதா கட்சி)- தாமரை, அப்துல்சத்தார்.க (சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா)- வாயு சிலிண்டர், இர.அருள் (பாட்டாளிமக்கள் கட்சி)- மாம்பழம், ப.சதீஷ்குமார் (நாம்தமிழர் கட்சி)- மெழுகுவர்த்தி, சுயேட்சை வேட்பாளர்கள்: க.கார்வண்ணன் (சுயே)- கத்திரிக்கோல், ரா.செந்தில்குமார் (சுயே)- ஏழு கதிர்களுடன் கூடிய பேனாவின் முனை, இரா.தங்கபாண்டியன் (சுயே)- மேசை, நா.திருநாவுக்கரசு (சுயே)- தேங்காய், ச.திவாகர் (சுயே)- புகைப்படக்கருவி, செ.வினோபா (சுயே)- வைரம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.