புது தில்லி: திருப்பூரில் 3 கண்டெய்னர் லாரிகளில் பிடிப்பட்ட ரூ. 570 கோடி பணத்துக்கு இதுவரை யாரும் உரிமை கோராததால், சந்தேகத்துக்கு இடமளிக்கிறது தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணைய அலுவலக அதிகாரி, கைப்பற்றப்பட்ட பணத்துக்கு யாரும் இதுவரை உரிமை கோராததால், சந்தேகத்துக்கு இடமளிக்கிறது என்றார்.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்துமாறு வருமான வரித் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் இதை உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றார்.
நள்ளிரவு 12.05 மணியளவில் திருப்பூர் அருகே கோவையிலிருந்து ஐதராபாத்திற்கு செல்லும் வழியில் உரிய ஆவணங்களின்றி 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.570 கோடி பணத்தை, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் 7 கிலோ மீட்டர் தொலைவுக்கு துரத்திச் சென்று செங்கப்பள்ளி அருகே பறிமுதல் செய்தனர்.
கண்டெய்னர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
கண்டெய்னர் லாரிகளில் இருந்த பணம் கோவையில் இருந்து விஜயவாடா எஸ்பிஐ வங்கிக்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், பணத்திற்கான ஆவணங்களின் நகல்களே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே, தற்போது திருப்பூர் வடக்கு, அவினாசி செலவினப் பார்வையாளராக உள்ள குடே ஸ்ரீனிவாஸ் ஐஏஎஸ் தலைமையில், விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஊழியர்களுக்கான சலுகைகளைக் குறைக்கும் டெலோய்ட்! ஐவிஎஃப் சிகிச்சைக்கான நிதியையும்

கே.எல். ராகுல் 152*: தில்லி கேபிடல்ஸ் 264 ரன்கள் குவிப்பு!

மேட்டுப்பாளையம் அருகே தாயைப் பிரிந்து தவிக்கும் குட்டி யானை!

ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


