பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

பணத்தைக் கண்டு மக்கள் மயங்கக் கூடாது: அன்புமணி

அரசியல் கட்சிகள் கொடுக்கும் பணத்தைக் கண்டு மக்கள் மயங்க வேண்டாம் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

News image
Updated On :15 மே 2016, 4:28 am

அரசியல் கட்சிகள் கொடுக்கும் பணத்தைக் கண்டு மக்கள் மயங்க வேண்டாம் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

 இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-

 தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் பல்லாயிரக்கணக்கான கோடிகளை மாவட்ட அளவில் பதுக்கி வைத்துவிட்டன.

 அந்தப் பணம் இப்போது உள்ளூர் காவல்துறை ஒத்துழைப்புடன் விநியோகிக்கப்படுகிறது. இரு திராவிடக் கட்சிகளும் ஆட்சியில் இருக்கும்போதே மக்களுக்கு நன்மை செய்திருந்தால் இப்போது வாக்குக்கு பணம் தர வேண்டிய அவலம் ஏற்பட்டிருக்காது. 

 வாக்காளர்களுக்கு பணத்தை செலவும் செய்யும் கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் பணம் சம்பாதிப்பதில்தான் கவனம் செலுத்துவார்களே தவிர மக்களுக்காக எதையும் செய்யமாட்டார்கள்.

 ஊழல் செய்து பணம் சம்பாதிப்பது என்ற பெரிய மீனை பிடிப்பதற்கு தூண்டிலில் பணம் என்ற சிறிய மீனை வைத்து வீசுகிறார்கள். பணத்தைக் கண்டு மக்கள் மயங்கிவிடக்கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.