ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அரசுப் பள்ளியில் திருட்டு

போச்சம்பள்ளி அரசுப் பள்ளியில் புதன்கிழமை இரவு தேர்வுக் கட்டுப்பாட்டு அறையின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போச்சம்பள்ளி போலீஸார் தேடிவருகின்றனர்.

Updated On :10 ஆகஸ்ட் 2018, 8:45 am IST

போச்சம்பள்ளி அரசுப் பள்ளியில் புதன்கிழமை இரவு தேர்வுக் கட்டுப்பாட்டு அறையின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போச்சம்பள்ளி போலீஸார் தேடிவருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை இரவு மர்ம நபர்கள் பத்துக்கும் மேற்பட்ட அறைகளின் பூட்டுகளை உடைத்து திருட முயற்சித்துள்ளனர்.
இதில் பள்ளியின் முக்கிய அறையான தேர்வுக்கட்டுப்பாட்டு அறையின் பூட்டை உடைத்து அறையில் இருந்த இரண்டு பீரோக்களை உடைத்துள்ளனர். பிறகு அந்த அறையில் இருந்த ரேடியோவின் மைக்கில் இருந்த பேட்டரியை எடுத்துச் சென்றுள்ளனர். கடந்த ஒரு வாரத்துக்கு முன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண்கள் ஆசிரியரின் அறையின் பூட்டை உடைத்து மேஜையில் வைக்கப்பட்டிருந்த ரூ.2,500 எடுத்துக்கொண்டு மின்விளக்குகளை உடைத்துச் சென்றுள்ளனர். இந்த இரண்டு பள்ளிகளிலும் இரவு நேரக் காவலர்கள் இல்லாததால்தான் இந்த திருட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.