தேர்தலில் வெற்றி பெற மஜதவினர் நடைபயணம்
சட்டப்பேரவைத் தேர்தலில் மஜத வெற்றி பெற்று குமாரசாமி முதல்வராக வேண்டி, அக் கட்சியின் இளைஞர் அணியினர் பெங்களூரிலிருந்து
சட்டப்பேரவைத் தேர்தலில் மஜத வெற்றி பெற்று குமாரசாமி முதல்வராக வேண்டி, அக் கட்சியின் இளைஞர் அணியினர் பெங்களூரிலிருந்து மைசூரு சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு நடைபயணம் மேற்கொண்டனர்.
மஜத இளைஞரணி செயலாளர் ராகேஷ் எம். தேஷேரல்லா தலைமையில் இந்த நடைபயணம் நடைபெற்றது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மாநிலத்தில் குமாரசாமி தலைமையில் மஜத ஆட்சி நடைபெற்ற போது பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
20 மாதங்கள் சிறந்த ஆட்சியை வழங்கிய குமாரசாமியை இன்றளவும் மக்கள் நினைத்து பார்க்கின்றனர்.
எனவே, சட்டப்பேரவைத் தேர்தலில் மஜத வெற்றி பெற்று குமாரசாமி முதல்வராக வேண்டி மஜத இளைஞர் அணிச் சார்பில் பெங்களூரிலிருந்து மைசூரு சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு நடைபயணம் மேற்கொண்டுள்ளோம். எங்கள் வேண்டுதலை மக்கள் நிறைவேற்றித் தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.