முகப்பு
பெங்களூரு

8 திருட்டு வழக்குகளில் 12 பேர் கைது

பெங்களூரில்  8 திருட்டு வழக்குகளில் தொடர்புடையதாக,  12 பேரை போலீஸார் கைது செய்தனர்.  

Updated On : 25 டிசம்பர் 2018, 8:05 am IST
பகிர்:

பெங்களூரில்  8 திருட்டு வழக்குகளில் தொடர்புடையதாக,  12 பேரை போலீஸார் கைது செய்தனர்.  
பெங்களூரு மாநகர  வடகிழக்கு மண்டல போலீஸார்  மேற்கொண்ட விசாரணையில்,  8 திருட்டு வழக்குகளில் தொடர்புடையதாக 12 பேரை கைது செய்தனர். இவர்கள் இருந்து ரூ.1.60 கோடி மதிப்புள்ள பொருள்களை மீட்டிருந்தனர்.
மீட்கப்பட்ட  நகைகள்,  பொருள்களை திங்கள்கிழமை மாநகர காவல் ஆணையர் சுனில்குமார் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியது:-
 ரூ. 1.60 கோடி மதிப்புள்ள 6 கிலோ தங்க நகைகள்,  6 கார்கள், 4 இரு சக்கரவாகனங்களை போலீஸார் மீட்டுள்ளனர். பொதுமக்களுக்கு தங்கள் உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது குறித்து பல்வேறு விழிப்புணர்வு முகாம்களை போலீஸார் நடத்தி வருகின்றனர். எனவே பொதுமக்கள் உடைமைகளையும், பொருள்களையும் பாதுகாத்துக் கொள்வதில் அலட்சியம் காட்டக்கூடாது. சிறப்பாக செயல்பட்ட தென்கிழக்கு மண்டல போலீஸாரை பாராட்டுகிறேன் என்றார். 
நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையர் சீமந்த்குமார்,  வட கிழக்கு மண்டல துணை ஆணையர் கலா கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments