சட்ட விரோதமாக கைத் துப்பாக்கி விற்பனை: நடிகர் உள்பட 4 பேர் கைது
சட்டவிரோதமாக கைத்துப்பாக்கி விற்பனை செய்த நடிகர் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சட்டவிரோதமாக கைத்துப்பாக்கி விற்பனை செய்த நடிகர் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு எச்.ஏ.எல் காவல் சரகம் ஜெகதீஷ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு அருகில் சிலர் சட்ட விரோதமாக கைத் துப்பாக்கியை விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸார், கைத் துப்பாக்கியை விற்பனை செய்த , எச்.ஏ.எல் இஸ்லாம்பூரைச் சேர்ந்த முகமது நிஜாம் (25), ஹுப்பள்ளி கணேஷ்பேட்டையைச் சேர்ந்த ஜெகதீஷ் (31) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 2 கைத் துப்பாக்கி, 10 தோட்டக்களை பறிமுதல் செய்தனர். அவர்களுக்கு துப்பாக்கியை விற்பனை செய்ய உதவியதாக நியூதிப்ப சந்திராவைச் சேர்ந்த சதீஷ்குமார் (44), கொத்தனூருவைச் சேர்ந்த சையத் சமீர் (32) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் ஜெகதீஷ் கன்னட திரைப்படங்களில் கதாநாயகன் உள்ளிட்ட முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து எச்.ஏ.எல் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.