முகப்பு
பெங்களூரு

ஆடுகோடி காவல் சரகத்தில் இன்று மது விற்கத் தடை

ரதசப்தமியையொட்டி, ஆடுகோடி காவல் சரகத்தில் புதன்கிழமை மது விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 13 பிப்ரவரி 2019, 10:30 am IST
பகிர்:

ரதசப்தமியையொட்டி, ஆடுகோடி காவல் சரகத்தில் புதன்கிழமை மது விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெங்களூரு மாநகரக் காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
பெங்களூரு ஆடுகோடி காவல் சரகத்தில் பிப். 12,13-ஆம் தேதிகளில் ஊர்த்திருவிழா, தேர் ஊர்வலம் ஆகியவை நடைபெற உள்ளது. ஊர்த்திருவிழா, தேர் ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சமூக விரோதிகள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சி மேற்கொள்ளலாம். இதனை கருத்தில் கொண்டு, ஆடுகோடி காவல் சரக எல்லைக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை(பிப்.13) நண்பகல் 12 மணிவரை மது விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.