முகப்பு
பெங்களூரு

ஜன.27 இல் அப்துல் கலாம் சிறப்பு சொற்பொழிவு

திருவள்ளுவர் சங்கம் சார்பில் பெங்களூரில் ஜன.27-ஆம் தேதி அப்துல் கலாம் நினைவு அறக்கட்டளை சிறப்பு சொற்பொழிவுக் கூட்டம் நடைபெறுகிறது.

Updated On : 24 ஜனவரி 2019, 2:21 am IST
பகிர்:

திருவள்ளுவர் சங்கம் சார்பில் பெங்களூரில் ஜன.27-ஆம் தேதி அப்துல் கலாம் நினைவு அறக்கட்டளை சிறப்பு சொற்பொழிவுக் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து திருவள்ளுவர் சங்கம் வெளியிட்ட அறிக்கை: திருவள்ளுவர் சங்கத்தில் நிறுவப்பட்டுள்ள அறிஞர் அப்துல் கலாம் நினைவு அறக்கட்டளை சார்பில் பெங்களூரு ஸ்ரீராமபுரம், தயானந்த்நகர், 7-ஆவது குறுக்குவீதியில் உள்ள மாநகராட்சி கட்டடத்தின் சர்வக்ஞர் அரங்கத்தில் ஜன.27-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு அறிஞர் அப்துல் கலாம் நினைவு அறக்கட்டளை சிறப்பு சொற்பொழிவுக் கூட்டம் நடைபெறுகிறது.
விழாவுக்கு சங்கத் தலைவர் ப.இளவழகன் தலைமை வகிக்கிறார்.பெங்களூரு தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் து.சண்முகவேலன் முன்னிலை வகிக்கிறார். சங்கச் செயலாளர் எம்.ஆர்.பழம்நீ வரவேற்புரை ஆற்றுகிறார். இந்திய விண்வெளியும் இந்திய செயற்கைக்கோள் ஏவுகணை வாகனங்களும்-ஒருபார்வை என்றதலைப்பில் இஸ்ரோ முன்னாள் அறிவியலறிஞர் நாகராஜ் சிறப்புரை ஆற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் அனைவரும்பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.