நவ. 9 இல் மாடித் தோட்டம் அமைத்தல் பயிற்சி
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம் சார்பில், மாடியில் தோட்டம் அமைத்தல் தொடர்பாக
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம் சார்பில், மாடியில் தோட்டம் அமைத்தல் தொடர்பாக ஒருநாள் பயிற்சி வரும் வெள்ளிக்கிழமை (நவ. 9 ) சென்னை அண்ணா நகரில் நடைபெறவுள்ளது.
சுயவேலைவாய்ப்பு மற்றும் புதிய தொழில் முனைவோரை உருவாக்கும் நோக்கில், சென்னை அண்ணா நகரில் செயல்படும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தின் சார்பில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், மாடி தோட்டம் அமைத்தல் பற்றிய ஒருநாள் பயிற்சி வரும் வெள்ளிக்கிழமை (நவ.9) நடைபெறவுள்ளது.
பயிற்சி கட்டணம் ரூ.600: இந்த பயிற்சி நகரவாசிகள், மகளிர், மாணவர்கள், சுய உதவிக் குழுக்கள், இளைஞர்கள், தொழில் முனைவோர் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் நல்ல வாய்ப்பாக அமையும். பயிற்சிக்கான கட்டணம் ரூ.600. இந்த பயிற்சி வகுப்பு காலை 9.30 மணி முதல் மாலை 4.30 வரை நடைபெறுகிறது.
பயிற்சி பற்றிய குறிப்பேடு, கையேடு, மதிய உணவு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 044-26263484 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம், எண். யு-30, 10 -ஆவது தெரு, (ஜெயகோபால் கரோடியா பள்ளி பின்புறம்), அண்ணாநகர் என்ற முகவரியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மையத்தின் தலைவர் எச்.கோபால் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.