சாலை பாதுகாப்பு காட்சிக் கூடம் திறப்பு
சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் ஆணையரகத்தில் சாலை பாதுகாப்பு காட்சிக் கூடம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் ஆணையரகத்தில் சாலை பாதுகாப்பு காட்சிக் கூடம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
குழந்தைகளுக்கான சாலை பாதுகாப்புக் காட்சிக் கூடம் வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் ஆணையரகத்தில் உள்ள ஏழாவது தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் காட்சிக் கூடத்தின் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையர் ஏ.அருண் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் தலைமை வகித்து, அந்தக் கூடத்தை திறந்து வைத்தார்.இந்தக் காட்சிக் கூடத்தில் போக்குவரத்து சிக்னல் குறியீடுகள் அவை பற்றிய விளக்கங்கள், சாலை பாதுகாப்பு உபகரணங்கள், சாலை பாதுகாப்பு குறித்த பதாகைகள், ஒரு நடமாடும் ரோபோ ஆகியவை இடம் பெற்றுள்ளன. ஒரு தனியார் நிறுவனத்தில் பயிலும் மாணவர்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, குழந்தைகளை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ காட்சிக் கூடத்துக்கு வரும் மாணவர்களிடம், சாலை போக்குவரத்து விதிமுறைகளைக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், இணை ஆணையர்கள் பி.பாலகிருஷ்ணன், ஏ.ஜி.பாபு, சுதாகர்,நஜ்முல் ஹோடா,துணை ஆணையர் ஆர்.திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.