முகப்பு
சென்னை

குப்பைத் தொட்டியில் பழைய ரூபாய் நோட்டுகள்: தம்பதியிடம் விசாரணை

சென்னையில் குப்பைத் தொட்டியில் கிடந்த செல்லாத ரூ.13 லட்சம் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளை எடுத்து வைத்திருந்த தம்பதியிடம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On : 24 ஜனவரி 2019, 3:30 am IST
பகிர்:


சென்னையில் குப்பைத் தொட்டியில் கிடந்த செல்லாத ரூ.13 லட்சம் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளை எடுத்து வைத்திருந்த தம்பதியிடம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை ஓட்டேரி எல்லையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஜா.அந்தோனி (48), மனைவி தமயந்தி (42) ஆகியோரிடம் செல்லாத பழைய ரூபாய் நோட்டுகள் இருப்பதாக தலைமைச் செயலக குடியிருப்பு போலீஸாருக்கு புதன்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் போலீஸார், இருவரிடமும் விசாரணை செய்தனர். இதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால், வீட்டில் போலீஸார் சோதனையிட்டனர். அங்கிருந்து ரூ.13 லட்சம் மதிப்புள்ள செல்லாத பழைய ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழைய காகிதம் பொறுக்கும் தொழில் செய்யும் இருவரும், சேத்துப்பட்டில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் கடந்த மாதம் அந்த ரூபாய் நோட்டுகளை எடுத்ததாகத் தெரிவித்தனராம்.
மேலும் செல்லாத அந்த பழைய ரூபாய் நோட்டுகளை, புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றுவதற்கு முயற்சி செய்து வந்ததாகவும் கூறினராம். இது தொடர்பாக போலீஸார், இருவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.