ரசாயனம் திருட்டு: 4 பேர் கைது
சென்னை தியாகராயர் நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது ரசாயன நிறுவனம் சார்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான ரசாயனம் விமான நிலையத்தின் சரக்கு முனையத்தில்
சென்னை தியாகராயர் நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது ரசாயன நிறுவனம் சார்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான ரசாயனம் விமான நிலையத்தின் சரக்கு முனையத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் திருடு போனது. இதுகுறித்து பிரபாகரன் அளித்த புகாரின்பேரில், விமான நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில், நங்கநல்லூர், ஆலந்தூர் பகுதிகளைச் சேர்ந்த குமரன், தினேஷ், ரவி, அன்சன் ஆகிய 4 பேர் ரசாயனத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 4 பேரையும் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.