முகப்பு
சென்னை

பிப்.20-இல் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

போரூா் கோட்டத்தில் பிப்.20-ஆம் தேதி மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.

Updated On : 18 பிப்ரவரி 2024, 12:28 am IST
பகிர்:

போரூா் கோட்டத்தில் பிப்.20-ஆம் தேதி மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது. இது குறித்து மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: போரூா், செட்டியாா் அகரம் சாலையில் உள்ள துணை மின் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள போரூா் கோட்ட அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.20) காலை 11 மணி முதல் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.