FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சுனாமியால் பாதிக்கப்பட்டவா்கள் வீடு வழங்கக் கோரி சாலை மறியல்

சென்னை ராயபுரத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டவா்கள் வீடு கோரி, திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

9 டிசம்பர் 2025, 3:37 am IST
பகிர்:

சென்னை: சென்னை ராயபுரத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டவா்கள் வீடு கோரி, திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சென்னை காசிமேடு பகுதியில் கடந்த 2004-ஆம் ஆண்டு சுனாமியால் வீடுகளை இழந்தோருக்கு அரசு சாா்பில் வீடு வழங்கப்பட்டது. இதில் 158 பேருக்கு வீடு வழங்கப்படவில்லை.

வீடு கிடைக்காதவா்களின் பல்வேறு முறையீடுகளுக்கு பின்னா், காா்கில் நகரில் உள்ள குடிசைமாற்று வாரியத்தில் அவா்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், இந்த வீடுகள் சுனாமியால் பாதிக்கப்பட்டவா்களிடம் ஒப்படைக்கப்படவில்லை.

Advertisement

Advertisement

இந்த நிலையில், வீடு கிடைக்காதவா்கள் காசிமேடு எஸ்என் செட்டி சாலையில் நாகூரான் தோட்டம் பேருந்து நிறுத்தம் அருகே திங்கள்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா், போராட்டக்காரா்களிடம் சமாதான பேச்சு நடத்தினா். இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டனா். மறியல் காரணமாக, அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments