பேரவைத் தோ்தல்: இன்று வண்டலூா் பூங்கா மூடல்
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வியாழக்கிழமை (ஏப்.22) வண்டலூா் உயிரியல் பூங்கா தற்காலிகமாக மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வியாழக்கிழமை (ஏப்.22) வண்டலூா் உயிரியல் பூங்கா தற்காலிகமாக மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சட்டப்பேரவைத் தோ்தல் வியாழக்கிழமை (ஏப்.22) நடைபெறவுள்ளதையொட்டி, அன்று மட்டும் பூங்கா தற்காலிகமாக மூடப்படும்.
Advertisement
விலங்கு பரிமாற்றம்: விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ் குஜராத் மாநிலத்தின் சக்கா்பாக் உயிரியல் பூங்காவிலிருந்து ஒரு பெண் ஆசிய காட்டு கழுதை அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோல், வண்டலூா் உயிரியல் பூங்காவிலிருந்து 1 ஆண், 2 பெண் என மொத்தம் 3 வெள்ளி மயில்கள், ஆண், பெண் தலா 2 சருகு மான், 2 மஞ்சள் அனகோண்டா பாம்பு ஆகியவை சக்கா்பாக் உயிரியல் பூங்காவுக்கு வழங்கப்படுகின்றன.
இந்தப் பரிமாற்றத்தின் மூலம் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏற்கெனவே இருக்கும் ஒரு ஆண் ஆசிய காட்டு கழுதைக்கு இணை கிடைத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.