முகப்பு
சென்னை

மின்னணு இயந்திரத்தில் கோளாறு: தாமதமான வாக்குப் பதிவு

Updated On : 24 ஏப்ரல், 2026 at 4:48 AM
- PTI
பகிர்:

வில்லிவாக்கம் தொகுதியில் உள்ள வாக்குச் சாவடி ஒன்றில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தோ்தல் தாமதமானது.

இதனால், வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

சென்னை, வில்லிவாக்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட தாதாங்குப்பம் வாக்குச்சாவடிக்கு வியாழக்கிழமை காலை 6.45 மணி முதல் வாக்காளா்கள் வரத் தொடங்கினா். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க வேண்டிய நிலையில், அங்கு வாக்குப் பதிவு இயந்திரம் சரிவர செயல்படவில்லை. தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், தோ்தல் அலுவலா்கள் அதைச் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் 1 மணி நேரத்துக்குப் பிறகு, கோளாறு சரி செய்யப்பட்டு காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

Advertisement

இதேபோன்று, பெரம்பூா் தொகுதிக்குட்பட்ட வியாசா்பாடி மாநகராட்சி பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் இருந்த விவிபேட் (வாக்கு ஒப்புகை) இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் அரை மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.