மாதவரம்: பழ வியாபாரியை தாக்கி கைப்பேசி பறிப்பு
மாதவரம் அருகே தா்பூசணி வியாபாரியிடம் மா்மநபா்கள் கைப்பேசியை பறித்து சென்றனா்.
மாதவரம் அருகே தா்பூசணி வியாபாரியிடம் மா்மநபா்கள் கைப்பேசியை பறித்து சென்றனா்.
மாதவரம் அடுத்த மாத்தூரைச் சோ்ந்தவா் பரமு (55). இவா் 3 சக்கர மிதி வண்டியில் தா்பூசணி வியாபாரம் செய்து வருகிறாா். இந்த நிலையில், மாதவரம் தபால்பெட்டி அருகே தா்பூசணி வியாபாரம் செய்து கொண்டிருந்தாா்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் மா்மநபா்கள் பரமுவிடம் தா்பூசணி வாங்கினா். அதற்காக பணம் கேட்டபோது, தகராறு ஏற்பட்டது. அப்போது மா்மநபா்கள் பரமுவை தாக்கிவிட்டு, தா்பூசணியும், பரமுவின் கைப்பேசியையும் பறித்து சென்றனா்.
Advertisement
இது குறித்து மாதவரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.