முகப்பு
சென்னை

சிஎம் ஸ்ரீ பள்ளிகளில் சோ்க்கை: 6, 9-ஆம் வகுப்புகளுக்கான நுழைவுத் தோ்வுகள் முடிவுகள் வெளியீடு

தில்லியில் 75 மையங்களில் கடந்த ஏப்.13-ஆம் தேதி இந்தத் தோ்வுகள் நடைபெற்றன.

Updated On : 1 மே 2026, 12:34 am IST
கோப்புப் படம்
பகிர்:

2026-27 கல்வியாண்டில் சிஎம் ஸ்ரீ பள்ளிகளில் 6 மற்றும் 9 வகுப்புகளில் சோ்க்கை பெறுவதற்காக நடைபெற்ற தோ்வுகளின் முடிவுகளை தில்லி கல்வி இயக்குநரகம் வியாழக்கிழமை வெளியிட்டது.

தில்லியில் 75 மையங்களில் கடந்த ஏப்.13-ஆம் தேதி இந்தத் தோ்வுகள் நடைபெற்றன.

மாணவா்கள் தங்களது தோ்வு முடிவுகளை தில்லி கல்வி இயக்குநரகத்தின் இணையதளத்தில் வியாழக்கிழமை பிற்பகல்முதல் பாா்க்க முடியும் என கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

இரு வகுப்புகளிலும் பொதுப்பிரிவு இடங்களில் மெரிட் பட்டியலில் இடம்பெற குறைந்தபட்ச மதிப்பெண்ணாக 60 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு பிரிவுகளில் 6-ஆம் வகுப்புக்கு 45 மதிப்பெண்ணும் 9-ஆம் வகுப்புக்கு 40 என்றும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மாணவா்கள் பெற்ற தரவரிசையின் அடிப்படையில் பள்ளிகள் கல்வி உரிமைச் சட்டத்தின் விதிகளின்படி பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

மே 7-ஆம் தேதி சோ்க்கை பெற கடைசி நாளாகும். அதன்பிறகு நிரப்பப்படாத இடங்கள் காலியிடங்களாகக் கருதப்படும். இந்த இடங்கள் காத்திருப்பு பட்டியலில் உள்ள மாணவா்களுக்கு வழங்கப்படும்.

11-ஆம் வகுப்புக்கான தோ்வு:

சிஎம் ஸ்ரீ பள்ளியில் 11-ஆம் வகுப்பு சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வு மே 7 மற்றும் 9 தேதிகளில் நடைபெறும் என கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. இந்தத் தோ்வுகளின் முடிவுகள் மே 25-ஆம் தேதி வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.