முகப்பு
சென்னை

கஞ்சா பறிமுதல்: திரிபுரா இளைஞா் கைது

ரயிலில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, திரிபுரா இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 10 ஜூன் 2026, 3:14 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

ரயிலில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, திரிபுரா இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை பெரம்பூா் ரயில் நிலையம் பகுதியில் செம்பியம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்கு சந்தேகத்துகுரிய வகையில் நடந்து வந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா். போலீஸாா், அவா் பையை சோதனையிட்டனா். இதில், அந்தப் பையில் இருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில் அவா், திரிபுரா மாநிலம் அகா்தலா பகுதியைச் சோ்ந்த ஹ.ராகேஷ் மியா (29) என்பதும், திரிபுராவில் இருந்து கஞ்சாவை ரயிலில் கடத்திக் கொண்டு வந்திருப்பதும் தெரிய வந்தது. போலீஸாா், ராகேஷை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனா்.

Advertisement

Advertisement