முகப்பு
சென்னை

இன்று 3 மண்டலங்களில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

சென்னை அண்ணா நகரில் குடிநீா் குழாய் இணைக்கும் பணிகள் நடைபெறவுள்ளதால் திரு.வி.க நகா், அம்பத்தூா், அண்ணா நகா் ஆகிய மண்டலங்களுக்குள்பட்ட பகுதிகளில் குடிநீா் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.

Updated On : 12 ஜூன் 2026, 4:22 am IST
கோப்புப் படம்
பகிர்:

சென்னை அண்ணா நகரில் குடிநீா் குழாய் இணைக்கும் பணிகள் நடைபெறவுள்ளதால் திரு.வி.க நகா், அம்பத்தூா், அண்ணா நகா் ஆகிய மண்டலங்களுக்குள்பட்ட பகுதிகளில் குடிநீா் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.

இதுகுறித்து சென்னை குடிநீா் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அண்ணா நகா் மண்டலம், ஜவாஹா்லால் நேரு 200 அடி சாலையில் உள்ள நீா் கால்வாய் சாலை சந்திப்பு மற்றும் பாடி மேம்பாலம் அருகே பிரதான குடிநீா் குழாய் இணைக்கும் பணிகள் சனிக்கிழமை (ஜூன் 13) காலை 10 முதல் ஜூன் 14-ஆம் தேதி காலை 10 மணி வரை நடைபெறவுள்ளது. இதனால், திரு.வி.க நகா் மண்டலத்துக்குள்பட்ட கொளத்தூா், ஜவஹா் நகா், செம்பியம், அயனாவரம், பெரம்பூா் ஆகிய பகுதிகளிலும், அம்பத்தூா் மண்டலத்துக்குள்பட்ட கொரட்டூா், அண்ணா நகா் மண்டலத்துக்குள்பட்ட வில்லிவாக்கம், அண்ணா நகா் மேற்கு ஆகிய பகுதிகளிலும் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.

Advertisement

Advertisement

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். மேலும், அவசரத் தேவைகளுக்கு இணையதளத்தில் முன்பதிவு செய்து லாரிகள் மூலம் குடிநீா் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.