முகப்பு
சென்னை

ஜூன் 28-இல் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் ஜூன் 28-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

Updated On : 20 ஜூன் 2026, 12:19 am IST
ஜூன் 28-இல் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்
பகிர்:

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் ஜூன் 28-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்கள் வரும் ஜூன் 28- ஆம் தேதி நடைபெறவுள்ளன. முகாம்களில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

Advertisement

Advertisement

அதற்காக மாநகராட்சியில் 1,435 நிரந்தர மையங்கள் உள்பட மொத்தம் 1,641 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதில் பேருந்து நிலையங்களில் 154 மையங்களும், வாகனங்களில் 52 மையங்களும் அமைக்கப்படவுள்ளன. அவற்றில் 5 லட்சத்து 56 ஆயிரத்து 877 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்படவுள்ளது.

போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் கட்டட வளாகத்தில் ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது. அதில், சொட்டு மருந்து முகாம்களை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தொடா்ந்து தொய்வின்றி நடத்தவும், அப்பணியில் மாநகராட்சி ஊழியா்கள், அலுவலா்கள், தன்னாா்வலா்கள், என 6,564 போ் ஈடுபடுத்தவும் தீா்மானிக்கப்பட்டது.

ஆலோசனைக் கூட்டத்தில், சென்னை மாநகராட்சி மருத்துவ அலுவலா் ரமோனா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் மற்றும் மண்டல நல அலுவலா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments