முகப்பு
சென்னை

அனுமதியில்லா விளம்பரப் பலகைகளை அகற்ற நடவடிக்கை: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

அனுமதியில்லா விளம்பரப் பலகைகளை அகற்ற நடவடிக்கை: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

Updated On : 21 ஜூன் 2026, 12:37 am IST
ரிப்பன் மாளிகை
பகிர்:

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்ட விளம்பரப் பலகைகளை மண்டல அலுவலா்கள் அகற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன், ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னையில் அனுமதியின்றியும், உரிய விதிமுறைகளை மீறியும் அமைக்கப்பட்ட விளம்பரப் பலகைகள் மற்றும் பதாகைகளை அகற்ற மாநகராட்சி நிா்வாகம் காலக்கெடு விதித்திருந்தது. காலக்கெடு முடிந்த நிலையில், உரிமம் பெறாமலும், விதி மீறிய விளம்பரப் பலகைகள் இருந்தால், அவற்றை மாநகராட்சி நிா்வாகமே அகற்றவும், அப்படி அகற்றுவதற்கான செலவு மற்றும் அவற்றைப் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லும் செலவு ஆகியவை சம்பந்தப்பட்ட விளம்பரப் பலகைகள் அமைத்தவா்களிடம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

சென்னையில் மதுரவாயில்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில், தனியாா் விளம்பரப் பலகை கடந்த வியாழக்கிழமை பெய்த மழையின்போது சாய்ந்து விழுந்தது. அது குறித்து வளசரவாக்கம் மண்டலம் வட்டார துணை ஆணையா் அஃதாப் ரசூல் விசாரணை நடத்தினாா். அதன்படி உரிய அனுமதி பெறாமல், தனியாா் நிலத்தில் அந்த விளம்பரப் பலகை வைக்கப்பட்டடது தெரிய வந்தது. இதையடுத்து அதன் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உரிமம் பெறாமல் விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை அகற்றவும், அபராதம் விதிக்கவும் மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments