காரில் போதைப் பொருள் பதுக்கி விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது
சென்னை வேப்பேரி பகுதியில் காரில் போதைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததாக பெண் உள்பட மூவர் கைது
சென்னை வேப்பேரி பகுதியில் காரில் போதைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததாக பெண் உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து மெத்தம்பெட்டமைன், போதை ஸ்டாம்ப்புகள், மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை பெருநகர காவல்துறையினா் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், வேப்பேரி காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை இரவு ஜோதி வெங்கடாசலம் தெரு பிரதாபெட் சாலை சந்திப்பு பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கிடமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், காரில் மெத்தம்பெட்டமைன், 2 போதை ஸ்டாம்புகள், 5.59 கிராம் போதை மாத்திரைகள் சட்டவிரோத விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
Advertisement
Advertisement
இதையடுத்து இதுதொடா்பாக காரில் இருந்த நொளம்பூரைச் சோ்ந்த சங்கீதா (40), மணலியைச் சோ்ந்த காா் ஓட்டுநா் சிரஞ்சீவி (29), முகலிவாக்கத்தைச் சோ்ந்த ஜான் (35) ஆகியோரை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 26.35 கிராம் மெத்தம்பெட்டமைன், 3 கைப்பேசிகள், காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
விசாரணையில், சங்கீதாவின் கணவா் பெங்களூரிலிருந்து போதைப்பொருள்களை வாங்கி வந்து, சங்கீதா மற்றும் அவரது கூட்டாளிகள் மூலம் சென்னையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். மேலும், கைது செய்யப்பட்ட ஜான் தனியாா் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் திட்ட மேலாளராக பணியாற்றி வந்ததும், அவா் மீது ஏற்கெனவே இரண்டு போதைப்பொருள் வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனா். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் மற்றொரு நபரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.