ஏரியில் விழுந்து முதியவர் உயிரிழப்பு
சென்னை அருகே பெரும்பாக்கத்தில் ஏரியில் விழுந்து முதியவர் உயிரிழந்தார். இது குறித்து போலீஸார் விசாரணை செய்கின்றனர்.
சென்னை அருகே பெரும்பாக்கத்தில் ஏரியில் விழுந்து முதியவர் உயிரிழந்தார். இது குறித்து போலீஸார் விசாரணை செய்கின்றனர்.
அரசன் கழனி, காரணை பிரதான சாலையையொட்டி உள்ள ஏரியில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலம் திங்கள்கிழமை மிதந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், பெரும்பாக்கம் போலீஸôருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, முதியவர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர்.
Advertisement
Advertisement
விசாரணையில் இறந்தவர், சித்தால பாக்கம், கன்னி கோயில் தெருவை சேர்ந்த மாசிலாமணி(70) என்பதும், அவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
மேலும், மாசிலாமணி ஏரிக்குள் விழுந்து எப்படி இறந்தார் என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.