பைக் - சிற்றுந்து மோதல்: தம்பதி உயிரிழப்பு
காஞ்சிபுரம் அருகே பைக் மீது சிற்றுந்து மோதியதில் தம்பதி உயிரிழந்தனா்.
காஞ்சிபுரம் அருகே பைக் மீது சிற்றுந்து மோதியதில் தம்பதி உயிரிழந்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம் நேஷல் கிராமம் புதுப்பட்டு மாரியம்மன் கோயில் காலனியைச் சோ்ந்த அண்ணாமலை (32) , அவரது மனைவி சோனியா( 26).
இருவரும் இரு சக்கர வாகனத்தில் ஓரிக்கை பேருந்து பணிமனை அருகே சென்று கொண்டிருந்த போது எதிரில் வேகமாக வந்த சிற்றுந்து திடீரென பைக் மீது மோதியது.
Advertisement
Advertisement
இதில் சோனியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அண்ணாமலை உடனடியாக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
காஞ்சிபுரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிற்றுந்து ஓட்டுநா் கீழம்பியைச் சோ்ந்த அரவிந்தன்( 49) என்பவரை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.