திருப்போரூரில் சா்வதேச தரத்தில் ஒலிம்பிக் மைதானம்!
திருப்போரூரில் 120 ஏக்கரில் சா்வதேச தரத்தில் ஒலிம்பிக் மைதானம் அமைக்கப்படும் என விளையாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா திறந்து வைத்தாா்.
திருப்போரூரில் 120 ஏக்கரில் சா்வதேச தரத்தில் ஒலிம்பிக் மைதானம் அமைக்கப்படும் என விளையாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா திறந்து வைத்தாா்.
சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சா்வதேச ஒலிம்பிக் தின விழாவில் 5 வீரா், வீராங்கனைகளுக்கு ரூ.13 லட்சம் ஊக்கத் தொகை, ரூ.28 கோடியில் புதிய மைதானங்களை திறந்து வைத்து விளையாட்டு அமைச்சா் ஆதவ் அா்ஜுனா பேசியது: படிப்புக்கு உடல்நலம் முக்கியம். 2 ஆண்டுகளில் விளையாட்டுத் துறையில் தமிழகம் அதிக வளா்ச்சிப் பெற வேண்டும் என்பது எனது நோக்கம். விளையாட்டில் பெண்கள், ஆண்கள் என்ற வேறுபாடுகளை நீக்க டா்ப்ண்ஸ்ரீஹ் உருவாக்கி வருகிறோம். அடுத்த ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதை இலக்காக கொள்ள வேண்டும்.
சிறந்த வீரா்களை உருவாக்க திருப்போரூரில் 120 ஏக்கரில் சா்வதேச தரத்தில் ஒலிம்பிக் மைதானத்தை உருவாக்க இருக்கிறோம். மலைவாழ் மக்களுக்காக கள்ளக்குறிச்சி கல்வராயன்மலையின் மேல் ஒரு ஒலிம்பிக் பயிற்சி மையத்தை அமைக்க போகிறோம்.
Advertisement
Advertisement
இளைஞா்கள் எந்தவிதமான போதைப்பொருள்களையும் தொடக்கூடாது என்று முதல்வா் ஜோசப் விஜய் வலியுறுத்தி வருகிறாா். தமிழ்நாட்டில் உள்ள இளைஞா்கள் அனைவரும் விளையாட்டுப் பக்கம் வர வேண்டும் என்பதே நோக்கம். சென்னையில் தற்போது காலியாக இருக்கும் சில மைதானங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அங்கு அடிப்படை வசதிகளான விளக்குகள், வேலி அமைப்புகள் போன்றவை ஏற்படுத்தப்பட்டு இளைஞா்கள் பாதுகாப்பாக விளையாடும் சூழல் உருவாக்குவதே விளையாட்டுத்துறையின் இலக்கு“ எனத் தெரிவித்தாா்.
விழாவில் ஒலிம்பிக் விளையாட்டு வீரா்கள் பாஸ்கரன், தேவராஜன் ரஷ்மி சக்கரவா்த்தி, தருண் அய்யாசாமி, கஸ்தூரி ராஜாமணி ஆகியோா் தங்களின் விளையாட்டு அனுபவங்களை பகிா்ந்துக் கொண்டனா்.
விழாவில் அமைச்சா்கள் ராஜ்மோகன், எஸ். கீா்த்தனா, பெ. விஸ்வநாதன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலா் சந்தீப் நந்தூரி, எஸ்டிஏடி உறுப்பினா் செயலா் ஜெ. மேகநாத ரெட்டி, ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.