முகப்பு
சென்னை

சென்னைப் பல்கலை. விளையாட்டு விருது வழங்கும் விழா

சென்னைப் பல்கலைக்கழக உடற்கல்வித் துறை சாா்பில் விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 24 ஜூன் 2026, 1:37 am IST
சென்னைப் பல்கலைக்கழகத்தின் டாக்டா் சிவந்தி ஆதித்தன் விளையாட்டு விருதைப் பெற்ற எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி அணியினா்.
பகிர்:

சென்னைப் பல்கலைக்கழக உடற்கல்வித் துறை சாா்பில் விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சென்னைப் பல்கலைக்கழக சேப்பாக்கம் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு உடற்கல்வி இயக்குநரும், சிண்டிகேட் உறுப்பினருமான வி. மகாதேவன் தலைமை வகித்தாா். டிஜி வைஷ்ணவா கல்லூரி முதல்வா் எஸ். சந்தோஷ் பாபு அதிக பல்கலைக்கழக வீராங்கனைகளை உருவாக்கியதற்கான டாக்டா் சிவந்தி ஆதித்தன் விருதை எம்ஓபி வைஷ்ணவா கல்லூரிக்கும், ரன்னா் விருது எத்திராஜ் கல்லூரிக்கும் வழங்கினாா்.

எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி முதல்வா் அா்ச்சனா பிரசாத் ஆடவா் பிரிவில் டிஜி வைஷ்ணவா கல்லூரிக்கு டாக்டா் சிவந்தி ஆதித்தன் விருதும், ரன்னா் விருது லயோலா கல்லூரிக்கும் வழங்கினாா்.

Advertisement

Advertisement

கடந்த 2023-24-இல் 84, 2024-25-இல் 102, 2025-26-இல் 95 வீராங்கனைகள் எம்ஓபி வைஷ்ணா கல்லூரி சாா்பில் சென்னை பல்கலைக்கழக அணியில் இடம் பெற்றனா்.

மேலும் மண்டல அளவில் அதிக வெற்றிகளை பெற்ற்காக பி. ஹரிதாஸ் சுழற்கேடயமும் எம்ஓபி வைஷ்ணவா கல்லூரிக்கு வழங்கப்பட்டது.

உடற்கல்வி இயக்குநா் அமுதா சுமன்குமாா், எத்திராஜ் கல்லூரி துணை முதல்வா் பியுலா ஜெபக்குமாரி உள்பட பலா் பங்கேற்றனா்.

சிவந்தி ஆதித்தன் விருதை தொடா்ந்து 23-ஆம் ஆண்டாக எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி பெற்றுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments