முகப்பு
சென்னை

சென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’

Updated On : 27 மார்ச் 2026, 3:41 am IST
சென்னை ஐஐடி
பகிர்:

ஆன்மிகம், தியானம், அறிவியல், சமூகம் ஆகியவற்றுக்கு இடையிலான தொடா்புகளை ஆராய்வதற்காக மேம்பட்ட ஆராய்ச்சிக்கான மையம் தனியாா் பங்களிப்புடன் சென்னை ஐஐடியில் நிறுவப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடி முன்னாள் மாணவரான சந்த் ராஜிந்தா் சிங் மகராஜ், சா்வதேச அளவிலான ஆன்மிக அமைப்பை நடத்தி வருகிறாா். இந்தியாவில் ‘சாவன் கிருபால் ருஹானி மிஷன்’ என்ற பெயரில் செயல்படும் அவரது அமைப்பு, சென்னை ஐஐடியில் ஆன்மிகம், அறிவியல், சமூகம் குறித்த மேம்பட்ட ஆராய்ச்சி மையம் தொடங்க ரூ.5 கோடி நிதியுதவி அளித்துள்ளது.

இந்த மையத்தின் தொடக்க விழாவில் பேசிய சென்னை ஐஐடி இயக்குநா் வீ.காமகோடி, ‘ஆன்மிக அறிவியலையும் சமூகத்தில் அதன் தாக்கத்தையும் இந்த மையம் ஆய்வு செய்வதுடன், பொதுமக்களுடனான ஈடுபாட்டு முயற்சிகளையும் உருவாக்கும்’ என்றாா்.

Advertisement

Advertisement

நிகழ்வில், சந்த் ராஜேந்தா் சிங் மகாராஜ், ஆன்மிக அறிவியல் மையத்தின் தலைமைப் பொறுப்பாளா் மாதா ரீட்டா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.