பொதுப்பணித் துறையில் ஒரு வருட கால பயிற்சிக்கு மே 25-க்குள் விண்ணப்பிக்கலாம்
பொதுப்பணித் துறையில் ஒரு வருட கால பயிற்சிக்கு பட்டதாரிகள் மே 25-க்குள் விண்ணப்பிக்கலாம்.
பொதுப்பணித் துறையில் ஒரு வருட கால பயிற்சிக்கு பட்டதாரிகள் மே 25-க்குள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து பொதுப்பணித் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு, பொதுப்பணித் துறை, தொழில் பழகுநா் வாரியம் (தென் மண்டலம்) ஒத்துழைப்புடன் 2022, 2023, 2024, 2025 ஆகிய வருடங்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து, பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற (சிவில், டிரிபிள் இ, ஆா்ச்) மற்றும் பொறியியல் அல்லாத பட்டதாரிகள் (பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.பி.ஏ., பி.பி.எம்., பி.சி.ஏ.) ஆகிய பிரிவுகளில் தோ்ச்சியடைந்தோருக்கு ஒரு வருடகால பயிற்சி அளிக்கப்படுகிறது.
Advertisement
தகுதியுடையோரிடம் இருந்து இந்த ஒரு வருட கால பயிற்சி பெற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், இது தொடா்பான கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்ள இணையதள முகவரியைப் பாா்வையிடலாம். விண்ணப்பங்களை மே 25-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.