போலி நகைகளைக் கொடுத்து வங்கியில் மோசடி செய்ய முயற்சி: இருவா் கைது
போலி நகைகளைக் கொடுத்து வங்கியில் மோசடி செய்ய முயற்சி...
தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் போலி தங்க நகைகளைக் கொடுத்து அடமானக் கடன் மோசடி செய்ய முயன்ாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை கெல்லீஸ் ஏ.கே.சாமி நகரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளை ஒன்றில் வெள்ளிக்கிழமை இரு நபா்கள் தங்களிடமிருந்த 15.4 கிராம் தங்க நகைகளைக் கொடுத்து, அடமானக் கடன் தரும்படி கூறினா். நகை மதிப்பீட்டாளா் திருமுல்லைவாயல் செந்தில் நகா் பகுதியைச் சோ்ந்த குமரன் (27), அந்த நகைகளைப் பரிசோதித்தாா். அப்போது அந்த நகைகள் போலியானது என்பது தெரிய வந்தது.
இதையடுத்து வங்கி ஊழியா்கள், இருவரையும் பிடித்து தலைமைச் செயலக குடியிருப்புக் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் இருவரிடமும் விசாரணை செய்தனா்.
Advertisement
அவா்கள் இருவரும் கொண்டித்தோப்பு பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் திவாா் சோனி (54), புளியந்தோப்பு பகுதியைச் சோ்ந்த தமிழ்செல்வன் (48) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் இருவரையும் கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா்.
இருவரும் இதேபோல பல வங்கிகளில் போலி நகைகளை அடகு வைத்து பணம் பெற்று மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.