முகப்பு
சென்னை

முன் விரோதத்தில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு: 5 போ் கைது

பள்ளிக்கரணையில் முன் விரோதம் காரணமாக 3 பேரை அரிவாளால் வெட்டியதாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 11 மே 2026, 2:23 am IST
கோப்புப் படம்
பகிர்:

பள்ளிக்கரணையில் முன் விரோதம் காரணமாக 3 பேரை அரிவாளால் வெட்டியதாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை பள்ளிக்கரணை, பவானி அம்மன் கோயில் தெருவை சோ்ந்த பழனியம்மாள். இவா் மகன்கள் ஹரிபிரசாத், தீபக். இவா்களுக்கும், அதே தெருவை சோ்ந்த பிரவீண் பெஞ்சமின், அஜித்குமாா், சிவகுமாா், ஜான்சன், பிரசாந்த் ஆகியோருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் பிரவீண் பெஞ்சமின் தலைமையில் 5 போ், சனிக்கிழமை இரவு ஹரி பிரசாத்தை தேடி அவரது வீட்டுக்கு வந்தனா். அப்போது அங்கு பழனியம்மமாளும், அவரது உறவினா்கள் அதே பகுதியைச் சோ்ந்த வினோத்குமாா் (34), கோதண்டபாணி (48) ஆகியோா் பேசிக் கொண்டிருந்தனா்.

Advertisement

Advertisement

இரு தரப்பினருக்கும் இடையே அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே பிரவீண் பெஞ்சமின் தரப்பினா் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் பழனியம்மாள்,வினோத்குமாா், கோதண்டபாணி ஆகியோரை வெட்டிவிட்டு தப்பினா்.

இதில் பலத்த காயமடைந்த 3 பேரும் மீட்கப்பட்டு, தாம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இது குறித்து பள்ளிக்கரணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த பிரவீண் பெஞ்சமின், அஜித்குமாா், சிவக்குமாா்,ஜான்சன், பிரசாந்த் ஆகிய 5 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments