ஆவின் வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீர்: டெங்கு கொசு உற்பத்தியாகும் அபாயம்?
திருவள்ளூர் அருகே ஆவின் பால்பண்ணை வளாகத்தில் மழைநீர் தேங்கியுள்ளதோடு டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும்
திருவள்ளூர் அருகே ஆவின் பால்பண்ணை வளாகத்தில் மழைநீர் தேங்கியுள்ளதோடு டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும் மாறி வரும் சூழ்நிலை உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
திருவள்ளூர் அருகே காக்களூரில் ஆவின் பால்பண்ணை வளாகம் அமைந்துள்ளது. இங்கு கிராமங்களில் இருந்து வரும் பால் சேகரித்து குளிரூட்டப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, பாலில் இருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களான பால்கோவா, நெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களைத் தயார் செய்து விற்பனைக்கு அனுப்பியும் வருகின்றனர். இந்த வளாகத்தில் பல்வேறு பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் தேங்காய் சிரட்டைகள் உள்ளிட்ட குப்பைகளைக் குவித்து வைத்துள்ளனர்.
ஏற்கெனவே, குளிரூட்டம் செய்யப்படும் இயந்திரங்களில் இருந்து வெளியேறும் நீரும், அதோடு, மழைநீரும் தேங்கியுள்ளதால் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் நிலை உள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து ஆவின் பால்பண்ணை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஏற்கெனவே ஆவின் பால்பண்ணை முழுவதும் அதிகாரிகள் ஆய்வு செய்து சென்றுள்ளனர். அப்போது, அவர்கள் கூறிய அறிவுரையின்படி டெங்கு கொசுக்கள் பரவாமல் தடுக்கும் வகையில் குளிரூட்டம் செய்யப்படும் பகுதிகளில் இருந்து வெளியேறும் நீர், குழாய் மூலம் வெளியேற்றப்படுகிறது. அதேபோல், வளாகத்தில் உள்ள மழை நீரையும் தேங்கவிடாமல் அவ்வப்போது அகற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.