சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டடத்தை சீரமைக்க கோரிக்கை
திருவள்ளூர் அருகே சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகக் கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் அருகே சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகக் கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் அருகே உள்ள புன்னம்பாக்கம், ராமதண்டலம் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புன்னம்பாக்கம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகம் மூலம் பொதுமக்கள் பட்டா, வருவாய், ஜாதிச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், அரசின் நலத்திட்ட உதவிகளான திருமண உதவித் தொகை, முதியோர் ஓய்வூதியம் போன்றவற்றை கிராம நிர்வாக அலுவலகத்திலேயே பெற்று வந்தனர்.
அதோடு, கிராம நிர்வாக அதிகாரிகள் கிராமத்தில் தங்கிப் பணியாற்ற வேண்டும் என்ற சூழ்நிலை இருந்தது. அதனால், பொதுமக்கள் எளிதாக அணுகி ஆவணங்களைப் பெறும் வகையில் கிராமங்கள் தோறும் கிராம நிர்வாக அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன. தற்போதைய நிலையில், புன்னப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலகம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதோடு, மழை பெய்தால் உள்ளே முடியாத அளவுக்கு ஒழுகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
அதனால், இந்த அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர் அமர்ந்து பணியாற்ற முடியவில்லை. இதனால், பொதுமக்களும் அலுவலரை எளிதில் அணுக முடியாத நிலை உள்ளது. அதனால், இடிந்து விழும் நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தை சீரமைத்து நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.