முகப்பு
திருவள்ளூர்

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பாராட்டு

முன்னாள் முதல்வர் அண்ணாவின் 110-ஆவது பிறந்தநாளையொட்டி, திமுக இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற கவிதை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வென்ற

Updated On : 15 ஜனவரி 2019, 3:32 am IST
பகிர்:


முன்னாள் முதல்வர் அண்ணாவின் 110-ஆவது பிறந்தநாளையொட்டி, திமுக இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற கவிதை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு டி.ஜே.எஸ். மெட்ரிக். பள்ளியில் பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
மாநில அளவில் நடைபெற்ற கவிதை ஒப்பித்தல் போட்டியில் கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் டி.ஜே.எஸ். மெட்ரிக். பள்ளியின் 11-ஆம் வகுப்பு மாணவி தேவிஸ்ரீ மாநில அளவில் முதல் பரிசு பெற்றார். அவருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சான்றிதழ் மற்றும் ரூ. 25ஆயிரத்துக்கான பரிசுத் தொகையை வழங்கினார்.
அதற்கான பாராட்டு விழா டி.ஜே.எஸ். மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, டி.ஜே.எஸ். கல்விக் குழுமத்தின் தலைவர் டி.ஜே.கோவிந்தராஜன் தலைமை வகித்தார்.
பள்ளி தாளாளர் டாக்டர் பழனி, பள்ளி முதல்வர் ஞானப்பிரகாசம், தலைமை ஆசிரியர்கள் கோபாலகிருஷ்ணன், ஜான்சிலட்சுமி, உடற்கல்வி இயக்குநர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், டி.ஜே.எஸ். கல்விக் குழுமத்தின் தலைவர் டி.ஜே.கோவிந்தராஜன் மாணவி தேவிஸ்ரீயை பாராட்டி புத்தகத்தை பரிசாக வழங்கினார். அதேபோல், மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் முதலிடம் பிடித்து தலா ரூ. 10ஆயிரம் பரிசு பெற்ற பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவி ஜனனி, கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற 11-ஆம் வகுப்பு மாணவி ஜெ.குமாரி ஆகியோருக்கும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், தனித்திறமை போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments