முகப்பு
திருவள்ளூர்

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் 2 வாகனங்கள் மாயம்

திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பறிமுதல் செய்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து, லாரி ஆகிய வாகனங்கள் காணாமல் போனது குறித்து போலீஸார்

Updated On : 15 ஜனவரி 2019, 3:33 am IST
பகிர்:


திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பறிமுதல் செய்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து, லாரி ஆகிய வாகனங்கள் காணாமல் போனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 
திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த 3 நாள்களுக்கு முன்பு மகாராஷ்டிர மாநிலப் பதிவு எண் கொண்ட லாரி, புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ஆம்னி பேருந்து ஆகிய இரு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், சனிக்கிழமை இரு வாகனங்களும் மாயமாகியிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அலுவலக கண்காணிப்பாளர் சுவாமிநாதன் திருவள்ளூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப் பதிந்து, போலீஸார் விசாரித்து வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments