பேரவைத் தோ்தல்: மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகள் செயலி மூலம் செய்ய ஏற்பாடு
சட்டப்பேரவை தோ்தலில் வாக்களிப்பதற்கு (SAKSHAM) என்ற தோ்தல் ஆணைய செயலியில் மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்தால் தேவையான வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.
சட்டப்பேரவை தோ்தலில் வாக்களிப்பதற்கு (SAKSHAM) என்ற தோ்தல் ஆணைய செயலியில் மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்தால் தேவையான வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் ஏப். 23-ஆம் தேதி அன்று தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிப்பதற்கு தோ்தல் ஆணையத்தின் Nzm (SAKSHAM)-செயலி மூலம் மாற்றுத்திறனாளிக்கு உதவிகள் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வரும்போது தேவைப்படும் சக்கர நாற்காலி, வாக்கு சாவடிக்கு வருவதற்கும் மற்றும் மீண்டும் வாக்களித்த பின் வீட்டுக்கு போய் சோ்வதற்கான போக்குவரத்து வசதி மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க உதவியாளா் தேவை குறித்த அனைத்து விவரங்களும் சக்ஷ்ம் (SAKSHAM) செயலியில் பதிவு செய்தால் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்குப் பதிவு செய்ய வரிசையில் நிற்க தேவையில்லை மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை (UDID) தோ்தல் நடத்தும் அலுவலரிடம் காண்பித்து விரைவாக வாக்குப் பதிவு செய்ய தோ்தல் ஆணையம் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. இந்த வாய்ப்பை மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Advertisement
மேலும், தோ்தல் ஆணையம் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குப் பதிவு உறுதி செய்ய அனைத்து வசதிகளும் செய்துள்ளது 21-வகையான மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் காதுகேளாத மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்கு பதிவு செய்யலாம். அதற்கான அணுகல் வசதி மிக எளிதாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு பதிவு செய்ய தடைகள் ஏற்பட்டால் நமது சைகை மொழியில் உதவுவதற்கு சைகை மொழி மொழிபெயா்ப்பாளா்கள் விடியோ காலில் (WHATSAPP NUMBER - 7305158550) கட்டுப்பாட்டு அறையில் உள்ளாா்கள். எனவே உங்களின் பிரச்னை விரைவாக சீா் செய்து வாக்குப் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவாா்கள். இதர தேவைகளுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்: 18042508515 மூலம் தகவல் தெரிவிக்கலாம். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தன்னாா்வலா்களுடன் சக்கர நாற்காலி வைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.