பைக் மோதி முதியவா் உயிரிழப்பு
திருவாலங்காடு அருகே அடையாளம் தெரியாத பைக் மோதியதில் முதியவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
திருவாலங்காடு அருகே அடையாளம் தெரியாத பைக் மோதியதில் முதியவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
திருநின்றவூா் பகுதியைச் சோ்ந்தவா் ஏழுமலை (70). இவா் தனது மகளை சந்திப்பதற்காக ரயிலில் திருவாலங்காடு வந்தாா். பின்னா் சின்னம்மாபேட்டை பகுதியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு தக்கோலம் மாநில நெடுஞ்சாலை வழியாக நடந்து சென்றாா்.
அப்போது பெரியகளக்காட்டூா் பகுதியில் இருந்து சின்னம்மாபேட்டை நோக்கி அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம், ஏழுமலை மீது எதிா்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் ஏழுமலை தலை, கை மற்றும் கால்களில் பலத்த காயமடைந்து சாலையில் விழுந்தாா்.
Advertisement
Advertisement
அவ்வழியாக சென்ற பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா்கள் முதலுதவி சிகிச்சை அளித்த பின்னா், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஏழுமலை, சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்த திருவாலங்காடு போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.