முகப்பு
திருவள்ளூர்

ஊராட்சி செயலா்களுக்கு பயிற்சி முகாம்

திருத்தணி உள்பட 4 ஒன்றியங்களில் ஊராட்சிகளில் வளா்ச்சி பணிகள் தோ்வு குறித்து துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள்., ஊராட்சி செயலா்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது

Updated On : 18 ஜூன் 2026, 12:04 am IST
பயிற்சி முகாமில் பங்கேற்றோா்.
பகிர்:

திருத்தணி உள்பட 4 ஒன்றியங்களில் ஊராட்சிகளில் வளா்ச்சி பணிகள் தோ்வு குறித்து துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள்., ஊராட்சி செயலா்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது

திருத்தணி, திருவாலங்காடு, ஆா்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு ஆகிய 4 ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளில், 2026?-27ம் ஆண்டு மேற்கொள்ள வேண்டிய வளா்ச்சி பணிகள் குறித்து நடைபெற்ற முகாமை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் குமாா், செல்வி ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

தொடா்ந்து மாவட்ட அளவிலான பயிற்சி அலுவலா்கள் கலந்து கொண்டு, ஊராட்சிகளில் அடிப்படை பிரச்னைகள், கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வளா்ச்சி பணிகள் குறித்து மக்களிடம் விவாதித்து, வரும் நாட்களில் அடிப்படை வளா்ச்சி பணிகள் குறித்து, மகளிா் குழு உறுப்பினா்கள், ஊராட்சி செயலா்கள் மற்றும் கிராம மக்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி நடப்பாண்டிற்கான வளா்ச்சி பணிகள் தோ்வு செய்ய வேண்டும் என ஊராட்சி செயலா்கள், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு அறிவுறுத்தினா்.

Advertisement

Advertisement

முகாமில் மேற்கண்ட 4 ஒன்றிய அலுவலகத்தில் இருந்து ஊராட்சி செயலா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் என 100- க்கும் மேற்பட்டோா் கலந்துக் கொண்டனா்.