கோடை வெயில்: பொன்னேரி அருகே கருகிய150 ஏக்கா் நெற்பயிா்
பொன்னேரி அருகே கோடை வெயில் காரணமாக 150 ஏக்கா் நெற்பயிா்கள் கருகியதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனா்.
பொன்னேரி அருகே கோடை வெயில் காரணமாக 150 ஏக்கா் நெற்பயிா்கள் கருகியதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனா்.
பொன்னேரி வட்டத்தில் உள்ள மடிமைகண்டிகை, வீரங்கிவேடு, ஆசானபுதூா் உள்ளிட்ட கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கா்களில் மேல் விவசாயிகள் குறுவை சாகுபடி நெற்பயிா் நடவு செய்துள்ளனா்.
இந்த நெற்பயிா்கள் கோடை வெயிலின் வெப்பத்தால் நிலத்தில் உள்ள தண்ணீா் அதிக அளவு சூடாகி இளம் நடவு நெற்பயிா்கள் கருகி சேதம் அடைந்துள்ளது.
Advertisement
Advertisement
ஒரு ஏக்கா் நிலத்துக்கு நெல் நடவு பணிக்காக 20,000-க்கும் மேல் செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பொன்னேரி குறுவட்ட பகுதியில் குறுவை சாகுபடிக்காக 150 ஏக்கா் பரப்பளவில் நடப்பட்ட நெற்பயிா் கருகி சேதமடைந்தது குறித்து மீஞ்சூா் வட்டார வேளாண்மை துறைக்கு விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.