முகப்பு
திருவண்ணாமலை

அரசு இசைப் பள்ளியில் முப்பெரும் விழா

திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப் பள்ளியின் 19-வது ஆண்டு விழா, தமிழ் இசை விழா, பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா ஆகியவை முப்பெரும் விழாவாக நடைபெற்றது.

Updated On : 5 ஏப்ரல் 2018, 9:40 am IST
பகிர்:

திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப் பள்ளியின் 19-வது ஆண்டு விழா, தமிழ் இசை விழா, பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா ஆகியவை முப்பெரும் விழாவாக புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, கலை பண்பாட்டுத் துறையின் காஞ்சிபுரம் மண்டல உதவி இயக்குநர் சு.குமார் தலைமை வகித்தார். திருவண்ணாமலை பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் செ.மதிவாணன் முன்னிலை வகித்தார். இசைப் பள்ளிதலைமை ஆசிரியர் (பொறுப்பு) ஆ.பா.ரவிசங்கர் வரவேற்றார். 
மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாவட்ட ஜவகர் மன்றம் சார்பில் நடைபெற்ற பல்வேறு கலைப் போட்டிகளில் வென்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கிப் பேசினார். விழாவில், மாவட்ட மைய நூலக நல் நூலகர் த.வெங்கடேசன் உள்பட அரசு ஊழியர்கள், பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments