சமரச மைய ஆண்டு விழா விழிப்புணர்வுக் கூட்டம்
திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வரும் 9-ஆம் தேதி நடைபெறும் விழிப்புணர்வுக் கூட்டத்தில், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.மகிழேந்தி
திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வரும் 9-ஆம் தேதி நடைபெறும் விழிப்புணர்வுக் கூட்டத்தில், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.மகிழேந்தி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சமரச மையத்தின் 13-ஆவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி மாபெரும் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஏப்ரல் 9-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது.
இதில், நீதிபதிகள், வழக்குரைஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் பங்கேற்கின்றனர். மேலும், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அரசு உயரதிகாரிகள், சமூக நல தொண்டு நிறுவன அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்கின்றனர்.
எனவே, பொதுமக்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.மகிழேந்தி தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.