முகப்பு
திருவண்ணாமலை

எம்.ஜி.ஆர். நினைவு தினம்: அதிமுகவினர் மரியாதை

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுகவின் நிறுவனருமான எம்.ஜி.ஆரின் நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

Updated On : 25 டிசம்பர் 2018, 9:54 am IST
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுகவின் நிறுவனருமான எம்.ஜி.ஆரின் நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, அதிமுகவினர் அவரது சிலை, படத்துக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் திருவண்ணாமலை - வேலூர் சாலையில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. எம்.ஜி.ஆரின் படத்துக்கு தெற்கு மாவட்ட அதிமுக செயலர் பெருமாள் நகர் கே.ராஜன் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, மாவட்ட அலுவலகத்தில் இருந்து இரு சக்கர வாகனங்களில் ஊர்வலமாகச் சென்று காந்தி சிலை அருகே அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவர் அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ. சுரேஷ்குமார், ஜெயலலிதா பேரவைச் செயலர் அருள்பழனி, நகர்ப்புறக் கூட்டுறவு வங்கித் தலைவர் டிஸ்கோ எஸ்.குணசேகர், ஜெயலலிதா பேரவைத் துணைத் தலைவர் ரேடியோ எஸ்.ஆறுமுகம், அமைப்பு சாரா ஓட்டுநரணி மாவட்டச் செயலர் சுனில்குமார் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல, திருவண்ணாமலை நகர அதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எம்.ஜி.ஆர். படத்துக்கு நகரச் செயலர் ஜெ.எஸ்.செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்யாறில்: செய்யாறு தொகுதி அதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டப்பேரவை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். படத்துக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் எம்.மகேந்திரன், எஸ்.கிருஷ்ணன்,ஏ.அருணகிரி, பூக்கடை ஜி.கோபால், எஸ்.ரவிச்சந்திரன்,செபாஸ்டின் துரை, எஸ்.கோவிந்தராஜ், வெங்கடேசன், சுதாகர், ராஜேஷ்குமார், தணிகாசலம் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.
ஆரணியில்: ஆரணியில் அதிமுக, புதிய நீதிக் கட்சி, தேமுதிக, அமமுக கட்சியினர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஆரணி நகர அதிமுக சார்பில், மாவட்ட அவைத் தலைவர் ஜெமினி ராமச்சந்திரன் தலைமையில், அண்ணா சிலை அருகிலிருந்து ஊர்வலமாகச் சென்று பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல, புதிய நீதிக் கட்சி சார்பில், கட்சியின் மண்டலப் பொறுப்பாளர் ஏ.சி.பாபு தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அமமுக சார்பில், பையூர் ஏ.சந்தானம் தலைமையில், அந்தக் கட்சியினர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல, தேமுதிக சார்பில் கட்சியின் மாவட்டச் செயலர் தெள்ளார் கோபி தலைமையில், அந்தக் கட்சியினக் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments