பெரியார் நினைவு தினம்: அரசியல் கட்சியினர் மரியாதை
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெரியாரின் 45-ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெரியாரின் 45-ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, திருவண்ணாமலையில் உள்ள அவரது சிலைக்கு திங்கள்கிழமை பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகர திமுக சார்பில், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் த.வேணுகோபால் தலைமை வகித்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். மாவட்ட திமுக துணைச் செயலர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன், நகரச் செயலர் ப.கார்த்திவேல்மாறன், நகராட்சி குழுத் தலைவர் குட்டி க.புகழேந்தி, இல.குணசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெரியார் சிலைக்கு அந்தக் கட்சியின் மாநிலச் செயலர் க.மோகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில், கட்சியின் ஒன்றியச் செயலர்கள் ரவி, இளையவளவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வேட்டவலத்தில்: வேட்டவலம், கடை வீதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பெரியார் படத்துக்கு வேட்டவலம் பி.பட்டாபிராமன் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலர் மணி, தலைமை ஆசிரியர் இஸ்மாயில் உள்படப் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
ஆரணியில்: ஆரணியில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சியினர் பெரியார் நினைவு தினத்தையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுக சார்பில், அரசு வழக்குரைஞர் க.சங்கர் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதேபோல, திமுக சார்பில், ஆரணி நகரச் செயலர் ஏ.சி.மணி தலைமையில், பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆர்.எஸ்.பாபு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. தயாநிதி, ஒன்றியச் செயலர் சுந்தர், நகர திமுக நிர்வாகி பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திராவிடர் கழகத்தினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்ட பலரும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து
மரியாதை செலுத்தினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.